எனது காதலை தவிர்த்ததால் நானும் என் நண்பனும் அவளை பலமுறை பலாத்காரம் செய்து கொன்றோம் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது சைக்கிளில் தேர்வு எழுத ஸ்ரீஜா சென்றார். ஆனால், பள்ளிக்கு ஸ்ரீஜா வரவில்லை என்று அவரது பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனே ஸ்ரீஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடியபோது, பள்ளிக்கு செல்லும் வழியில் அவரது சைக்கிள் மட்டும் ஒரு குடிசையின் முன் தனியாக நின்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அந்த குடிசைக்குள் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு ஒரு சாக்குமூட்டைக்குள் ஸ்ரீஜா அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் திலீபன் (20) என்ற வாலிபர் பிடித்து எலச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து உள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது நண்பர் சந்தோஷ் (20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவரான மணிகண்டன் (17) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதில் திலீபனும், சந்தோசும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, மாணவர் மணிகண்டன், திலீபன் மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திலீபன் போலீசில் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலத்தில், ''நானும், மாணவி ஸ்ரீஜாவும் உறவினர்கள். 2 பேரும் காதலித்து வந்தோம். திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.
நன்றாக பேசி வந்த காதலி திடீரென விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கொட்டகையில் தனிமையில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நானும் சந்தோஷும் விரைந்து சென்றோம். அப்போது, அவர்கள் இருவரும் அங்கே தனிமையில் ஜாலியாக இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துகொள்ள முடியாத நான், அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது, எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனே மணிகண்டனை அங்கிருந்து விரட்டி அடித்தோம்.
அதன் பின்னர், ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் அங்கேயே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தோம். இதில் ஸ்ரீஜா மயங்கி போனாள். எங்கே இந்த சம்பவத்தை அவள் வெளியே சொல்லிவிடுவாளோ என்று பயந்த நாங்கள், உடனே அவள் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம். பின்னர் அங்கு கிடந்த ஒரு பையை எடுத்து அவளது பிணத்தை திணித்து மூட்டையாக கட்டிவிட்டு அங்கிருந்து எதுவும் தெரியாததுபோல் தப்பி சென்று விட்டோம். ஆனாலும் தற்போது போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்." என்று கூறி இருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.