வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி மட்டக்களப்பு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், மட்டக்களப்பு ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிப்பதற்காக வெள்ளவத்தை பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்த நிரோஷன் தொலைபேசி கெட் செட்மூலம் உரையாடிக்கொண்டு புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
மரதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி படுகாயமடைந்த அவர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்/புனித மிக்கேலின் பழைய மாணவரான நிரோசன் மட்டக்களப்பில் இருந்து வெளியான பல்வேறு கலைப்படைப்புகளின் பின்னணியில் செயற்பட்டுள்ளதுடன், பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.