தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். புதிதாகா அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு, ஆறுமுகன் தொண்டமானும், டக்ளஸ் தேவானந்தாவும் பூரண ஒத்துழைப்பை வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து நாட்டின் எதிர்காலத்தின் பொருட்டு விசேட வேலைத்திட்டத்தை தற்போதே ஆரம்பித்துள்ளதாகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இதன் தொடர்பாக கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தீர்வு குறித்தும் அழிவு யுத்தத்திலிருந்து மீண்டெழுந்து வந்த மக்களுக்கு மேலும் ஆற்றவேண்டிய வாழ்வாதார உரிமைகள் குறித்தும் அமையப்போகின்ற புதிய அரசு அக்கறையுணர்வோடு செயற்படப்போவதாக உறுதி அளித்துள்ளதாக தெரவித்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.