மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


அகதிகள் பயணித்த படகு ஒன்றில் இருந்து 50க்கும் மேற்பட்ட சடலங்கள் மத்திய தரைக்கடலில் மீட்பு.

அகதிகள் பயணித்த படகொன்றில் இருந்து 50 மேற்பட்டோர்  இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் இருந்து புறப்பட்ட படகொன்றில் இருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மூச்சித்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகில் உயிருடன் இருந்த மீதி 430 பேர் சுவீடனின் கடலோர காவற்துறையினரின் கப்பல் ஒன்றினால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் மத்தியத் தரைக்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.