ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்கவில்லை.
அவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இடது பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கு வலது பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். இந்த மாநாட்டில் வரவேற்புரையாற்றிய கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாநாட்டுக்கு சமூகமளிக்கவில்லை என்றார். பௌத்த, ஹிந்து,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத அனுஸ்டானங்களுக்கு பின்னர் மாநாடு ஆரம்பமானது.
இந்த மாநாடு பொலன்னறுவை கதுருவெல ரஜரட்ட நவோதய விளையாட்டு மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதேவேளை, இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜயசூரிய, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து மிகவும் முக்கியமான கடமைகளை செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும் எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய பதவிக்காலத்தை அதிகரித்து கொள்வதற்காக கட்சிக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார் என்றார். பேராசிரியர் அவ்வாறு கூறியபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பார்த்து புன்முறுவல் செய்துக்கொண்டிருந்தார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.