விளையாட்டுத் துப்பாக்கிகளுடன் கல்கிஸ்சை டெம்பலர்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிட வந்த இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களாளே அவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கொள்ளையிட கொண்டுவந்ததாக கூறப்படும் விளையாட்டுத் துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.