சுந்தர் வீட்டிலே கோபித்துக் கொண்டு அந்த சிக்னல் அருகே வெறுப்பாக
நின்றிருந்தான். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாற்றி மாற்றி திட்டிய, "கையாலாகதப் பயலே" என்ற "திட்டு ஜாம்" மனதில் மிகுந்த நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.
சிவப்பு விளக்கு போட்டு, நல்ல எண்ணங்களை நிறுத்தியிருந்தது - மனம்!
டவுன் பஸ் ஒன்று சிக்னலில் நின்றது.
கபக்கென்று சிறுவனொருவன், பஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். ஓடிச்சென்று அருகில் உள்ள மின்சாரிய வாரிய ஆஃபீஸில் பில்லிற்கான பணத்தை கட்டி விட்டு, ஓடி வந்து மறுபடி அதே பஸ்ஸில் தொற்றிக்கொண்டு விட்டான்.
பஸ் சிக்னலிலே நிற்ற 90 வினாடியிலே சிறுவன் எலக்டிரிசிட்டி பில்லைக் கட்டி விட்டான்.
பச்சை விளக்கு விழுந்து பஸ் புறப்பட, சுந்தர் மனதிலும் பச்சை சிக்னல் விழுந்தது!
"அட, இந்த 90 வினாடிக்குள் முடியும் வேலைக்கா நான் வீட்டில் சண்டை போட்டேன்? அப்பாவிடம் வண்டி கொடுக்காவிட்டால் பில் கட்டப்போக மாட்டேன் என்று கத்தினேனே! நீ கட்டும்மா என்று அம்மாவிடம் சாடினேனே!"
ஓட்டமெடுத்தான் வீட்டிற்கு. அம்மா செய்த பொங்கலை சாப்பிட!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.