மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


** விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?


லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் பல தாங்கள் வழங்கும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் விஸ்டா தொகுப்பினைப் பதித்தே வழங்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பில் பழக்கப்பட்டவர்கள், தங்களிடம் உள்ள தனிப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகள் விஸ்டாவில் சரியாக வருவதில்லை என உணர்ந்த பலர் எக்ஸ்பி கேட்டால் அந்த நிறுவனங்கள் தற்போது விஸ்டா தான் பதிந்து தர முடியும். அதற்கான உரிமம் தான் தற்போது அமலில் உள்ளது என்று கூறி மறுத்துவிடுகிறார்கள்.


நாம் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்தி பழைய கம்ப்யூட்டருக்கென வாங்கி இருந்தாலும் அதனைப் புதிய கம்ப்யூட்டரில் பதிந்து செயல்படுத்த முடியவில்லை. மேலும் புதிய கம்ப்யூட்டருக்கான வாரண்டியின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் விஸ்டாவினை நீக்கிவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் கம்ப்யூட்டரை வழங்கிய நிறுவனங்கள் கூறி விடுகின்றன. இந்நிலையில் விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டர்களிலேயே எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதிந்து செயல்படுவதற்கான வழிகளை இங்கு காண்போம்.

விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீதே எக்ஸ்பி சிஸ்டத்தினையும் பதிய முயற்சித்தால் பின் விஸ்டா இயங்காமல் போய்விடும். அதன் bootloader மீது தான் புதிய இயக்கம் அமர்ந்துவிடுவதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மேலும் விஸ்டாவின் பூட் பைலை எக்ஸ்பி பூட் பைலை எடிட் செய்வது போல அவ்வளவு எளிதாக இயக்க முடிவதில்லை. எனவே ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கும் வகையில் டூயல் பூட் என்ற அடிப்படையில் விஸ்டா இருக்கும்போதே எக்ஸ்பியையும் பதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் இதற்கு உதவிடும் புரோகிராம் ஒன்று இணையத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த புரோகிராமின் பெயர் VistaBootPro. இந்த புரோகிராமினை www.vistabootpro.org என்ற முகவரியில் உள்ள வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து அதன் மூலம் எக்ஸ்பியை விஸ்டா இருக்கும் கம்ப்யூட்டரில் பதிந்திடும் முன் ஏற்கனவே உங்கள் முக்கிய பைல்களை பேக்கப் எடுத்து அவை சரியாகப் பதியப்பட்டிருக்கின்றனவா என்பதனைச் சோதித்து அறிந்த பின் பத்திரமாக அவற்றை வைத்திடுங்கள். பின் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

1. பார்ட்டிஷன் செய்த ஹார்ட் டிஸ்க்கை மீண்டும் பிரித்தல்:

My Computer ஐகானில் கிளிக் செய்து அதில் ‘Manage’ என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் மெனுவில் ‘Disk Management’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு எந்த டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். இதில் உள்ள காண்டெக்ஸ்ட் மெனுவில் ‘Shrink Volume’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. விண்டோஸ் எக்ஸ்பிக்கு இடம் ஒதுக்குதல்:

அடுத்து தேர்ந்தெடுத்த டிரைவில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும். பொதுவாக 10 ஜிபி இடம் அதற்குப் போதும். உங்கள் டிரைவின் மொத்த இடத்தைப் பொறுத்து விஸ்டா இயக்கம் இதற்கென இடம் ஒதுக்கும். அது 10 ஜிபிக்கும் குறைவாக இருந்தால் நீங்களாக 10 ஜிபி இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.


3. புது வால்யூம் உருவாக்குதல்:

டிஸ்க்கை (Shrunk) ஷ்ரங்க் அல்லது மறு பார்ட்டிஷன் செய்த பின்னர் எதற்கும் இடம் ஒதுக்காத ஏரியா ஒன்று டிஸ்க்கில் தென்படும். இது கிரே கலரில் ஷேட் அடித்துக் காட்டப்படும். இந்த ஏரியாவில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் கீழ்க்காணும் செயல்பாட்டினைச் சரியாக மேற்கொள்ளவும்.

4. புது வால்யூம் இடத்திற்கு பெயர் சூட்டலும் பார்மட் செய்தலும்:

இனி இந்த புதிய இடத்தினை பார்மட் செய்திட வேண்டும். இதில் NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தி அதனை விண்டோஸ் எக்ஸ்பி எனப் புதுப் பெயர் கொடுக்கவும். Quick Format என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கம்ப்யூட்டரை விண்டோஸ் எக்ஸ்பி சிடி கொண்டு பூட் செய்து இந்த இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை பதியவும்.

Dual Booting: (டூயல் பூட்டிங்)

1. விஸ்டாவின் BCD புரபைலை பேக் அப் செய்திட:

இனி டவுண்லோட் செய்த விஸ்டா பூட் புரோ புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். பின் இதனை இயக்கத் தொடங்கியவுடன் Backup / Restore சென்டருக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு Browse என்பதில் கிளிக் செய்து உங்களுடைய விஸ்டா சிஸடத்தின் தற்போதைய BCD புரபைல் பைல்களை பேக் அப் செய்திடவும்.

2. பி.சி.டி. பைல்களைப் பார்த்தல்:

உங்களுடைய பி.சி.டி. ரெஜிஸ்ட்ரி உங்களுக்குக் காட்டப்படும். இதில் எதுவும் எடிட் செய்திட முடியாது.


3.விஸ்டா பூட் லோடரை ரீ – இன்ஸ்டால் செய்தல்:

அடுத்து System Boot loader ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு System Boot loader Install Options (சிஸ்டம் பூட் லோடர் இன்ஸ்டால் ஆப்ஷன்ஸ்) என்ற பிரிவின் கீழ் உள்ள Windows Vista Bootloader என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் மெனுவில் All Drives என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Install Bootloader (இன்ஸ்டால் பூட்லோடர்) என்பதில் கிளிக் செய்தால் விஸ்டா ஆக்டிவேட் ஆகும்.

4. பழைய விண்டோஸ் ஸ்கேன்:

Diagnostics என்ற பிரிவில் Run Diagnostics என்பதில் கிளிக் செய்தால் பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கான பதிவுகளை சிஸ்டமே செய்துவிடும்.

5. இரண்டு சிஸ்டங்களை நிர்வகித்தல்:

Manage BCD OS Entries (மேனேஜ் பிசிடி ஓ.எஸ். என்ட்ரீஸ்) என்பதில் கிளிக் செய்திடவும். Rename OS entry என்பதில் செக் செய்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதுப் பெயர் கொடுக்கவும். இறுதியாக Apply Updates அப்ளை அப்டேட்ஸ் என்பதில் கிளிக் செய்து ரீஸ்டார்ட் செய்திடவும்.

மேலே சொன்ன அனைத்தும் சரியாக மேற்கொள்ளப்பட்டால் Windows Boot Manager மெனு விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகிய இரண்டு சிஸ்டங்களிலும் பூட் செய்திட ஆப்ஷன்களைக் காட்டும்.

சில குறிப்புகள்:

உங்களுடைய முக்கியமான டாகுமெண்ட் பைல்களை (இமெயில், மியூசிக், வீடியோஸ் மற்றும் முக்கிய ஆவணங்கள்) ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ள டிரைவில் பதியப்படுவதனைத் தவிர்க்கவும். இதன் மூலம் முக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் தற்செயலாக நம்மையும் அறியாமல் அழிக்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கலாம். விஸ்டா மூலம் டிரைவ் பார்ட்டிஷனை மீண்டும் புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். ஆனாலும் அதில் சில வரையறைகள் உள்ளன. இந்த வகையில் EASEUS Partition Manager என்னும் இலவச புரோகிராம் நமக்கு நம் தேவைக்கேற்றபடி உதவும் வகையில் உள்ளது. இதனை சர்ச் இஞ்சின் மூலம் தேடி டவுண்லோட் செய்து பதிந்து பயன்படுத்தலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.