
சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹனான் மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டது.
ஹனான் தலைநகர் சாங்ஷா ரயில் நிலையத்திலிருந்து, தெற்குப் பகுதியிலுள்ள ஷென்சென் என்ற இடதை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும், குயிசோவு என்ற மாகாணத்திலுள்ள டாங்ரென் ரயில் நிலையத்திலிருந்து ஷென்சென் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதையடுத்து, இரு ரயில்களுமே தண்டவாளத்தைவிட்டு கீழிறங்கியது.
இன்று அதிகாலை 2.34 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், 60 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.