மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பயண எச்சரிக்கை : அமெரிக்கா மீது இலங்கை பாய்ச்சல்

இலங்கைக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள பிரயாண எச்சரிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் உறுதியற்ற நிலையும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளும் தொடர்ந்து காணப்படுவதாகத் தெரிவித்திருந்த அமெரிக்க அரசு, இந்த விடயத்தில் அமெரிக்கக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இது தொடர்பாக தனது அதிருப்தியை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமல் அமெரிக்க அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றது எனவும் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

"இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை அமெரிக்க அரசு வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது" எனத் தெரிவித்துள்ள கோகன்ன, கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்கா படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில் போருக்குப் பிந்தைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கடல் கடந்த நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்கள் அந்ததந்த நாடுகளில் விளக்கமளிக்க வேண்டும் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நாடுகள் ஏற்கனவே சிறிலங்காவுக்கான பிரயாண எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தால் அவற்றைத் திரும்பப்பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் தூதரங்கள் குறிப்பிட்ட நாடுகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கின்றது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.