பனை மரத்திலே இடி இடிச்சா பாக்கு மரத்திலே வெடிப்பு விட்ட மாதிரி ஆயிருச்சு பாலகிருஷ்ணாவுக்கு. தெலுங்கிலே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா, இப்போதும் கலெக்ஷன் புலியாகவே கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். பேத்தி வயசு பொண்ணுங்களோட, இந்த தாத்தாக்கள் ஆடுறதை, மானாட மயிலாட ரேஞ்சுக்கு ரசிக்கறது அங்குள்ள ரசிகர்களுக்கு ஆனந்தம், பரமானந்தம். அப்படிதான் இந்த பாலகிருஷ்ணா, இளம் நடிகைகள் ஒருத்தர் விடாம ஆட்டிப்படைக்கிறார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் தெலுங்கில் என்னென்ன படத்திலே நடிக்கிறீங்க? என்று த்ரிஷாவிடம் கேட்டால், அவரோட இவரோடன்னு போடுற லிஸ்ட்டுல பால கிருஷ்ணாவும் இருந்தார். இப்போ த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போய்விட்டதால், பாலகிருஷ்ணா படத்தை லிஸ்ட்டில் இருந்தே து£க்கிவிட்டாராம்.
இதனால் பாலகிருஷ்ணா நடிக்கும் 'பீஷ்மா' என்ற படத்திற்கு பொருத்தமான ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கொடி நாட்டும் ஹீரோயின்களில் முக்கியமானவர்களான அனுஷ்கா, ஸ்ரேயா, நயன்தாரா வரைக்கும் கேட்டு பார்க்கிறார்களாம். தமிழில் ஒப்புக்கு சப்பாணியாக கூட இருக்க முடியாத ஷீலா, தெலுங்கில் இன்றைய தினம் ரசிகர்களின் 'ஆஹா' லிஸ்ட்டில் இருப்பதால், அவர் வரைக்கும் இறங்கியிருக்கிறார்களாம்.
தாத்தாவுக்காக மனசு இறங்குமா பொண்ணு?
-சிக்கு புக்கு

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.