மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> களத்தில் கவனம் இல்லை: தோனி

கிங்ஸ்டனில் நேற்று மேற்கிந்திய அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அணித் தலைவர் தோனி களத்தை சரியாக கணிக்கவில்லை, பேட்ஸ்மென்கள் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் சற்று மரியாதை கொடுத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

82/8 என்ற நிலையில் களம் சற்றே ஆடுவதற்கு எளிதான பிறகு விக்கெட்டை விட்டு விடாமல் நின்ற தோனி தனி நபராக 95 ரனகள் எடுத்து 9-வது விக்கெட்டுக்காக ஆர்.பி.சிங்குடன் இணைந்து 101 ரன்கள் சேர்க்க இந்திய அணி 188 என்ற மரியாதைக்குரிய இலக்கை எட்டியது.

ஆனால் முதலில் பந்துகள் சுவிங் ஆனபோது அதிக விக்கெட்டுகளை இழந்திருக்கக் கூடாது, இது பேட்ஸ்மென்களின் தவறு, 188 ரன்களை வைத்துக் கொண்டு எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம் என்றார் தோனி.

பேட்ஸ்மென்கள் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் கூடுதல் மரியாதை அளித்திருக்கவேண்டும், களம் முதலில் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. ஆனால் அதிகமான ஷாட்களை ஆடப் போய் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம் என்று ஆட்டம் முடிந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆனால் களம் முதலில் பேட்டிங்கிற்கு சவலாக இருக்கும் என்று தெரிந்துள்ள நிலையில் தோனி ஏன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது பற்றி விளக்கவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.