இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனப் பயன் பாடுகளில் அடிக்கடி ஏதேனும் புதுமையைப் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கூகுள் கருத்தரங்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
புதுமையான கூகுள்வேவ்” என ஒரு சேவையைத் தர இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மனித வாழ்க்கையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையின் அடிப்படையில் புதிய தெரு பரிமாணத்தை இமெயில் ஏற்படுத்தியது. மற்ற இணையப் பயன்பாடுகளுடன் இது இணைந்து மனிதனின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையின் நடைமுறையையும் இமெயில் மாற்றியது.
தற்போது கூகுள் அறிவித்திருக்கும் கூகுள் வேவ் இதே போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள்வேவ்” என்பது என்ன? தற்போதைய இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் ஓர் விரிவாக்கம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம். இது ஒரு பைல் ஷேரிங் தொழில் நுட்பம் என்று சரியாகப் பெயர் தரலாம்.
கூகுள் வேவ் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் படங்கள், போட்டோக்கள், வீடியோ கிளிப்களைத் தங்களிடையே பரிமாறிக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேசிக் கொள்ளலாம்.

இதுதான் ஏற்கனவே இருக்கிறது என்று எண்ணுபவர்கள் கூகுள் இந்த வசதியில் தான் அதிரடியாக ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பினை மட்டும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். கூகுள் வேவ் வந்தபின் அனுபவித்துப் பார்த்தால் தான் இது தெரியவரும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட்டாக கூகுள் இயக்குகிறது. இதன் கட்டமைப்பு தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
யார் வேண்டுமானாலும் இதில் பதிந்து தங்களையும் அதனை உருவாக்கும் பணியில் ஈடு படுத்திக் கொள்ளலாம். எனவே டெவலப்பர்கள் என்னும் இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ளலாம் கூகுள் நிறுவனத்தில் கூகுள் மேப்ஸ் தயாரித்த வல்லுநர் குழுதான் கூகுள் வேவ் உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறது.
கூகுள் வேவ் எப்போது வெளிவரும் என இன்னும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. நீங்கள் இது குறித்து அதிக ஆவல் கொண்டிருந் தால், கூகுள் வேவ் பற்றிய அறிவிப்புகள் உங்களை முதலில் வந்தடைய வேண்டும் என எண்ணினால் http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு கூகுள் வேவ் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு இந்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.
நீங்கள் கணிப்பொறி வல்லுநராக இருந்து இந்த திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்என்றால் இந்த என்ற முகவரிக்குச் செல்லவும்.
எழுதியவர் : கார்த்திக்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.