நீங்கள் விண்டோஸ் விஸ்டா பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால் நீங்கள் அவசியம் இதனைப் படித்து செயல்பட வேண்டும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத் திற்கான சர்வீஸ் பேக் 2ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சர்வீஸ் பேக்கில் முதல் சர்வீஸ் பேக் வெளியான பின் வந்துள்ள அனைத்து மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பைல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. கூடுதலாக விஸ்டாவுடனான அனுபவத்தினை மேம்படுத்தும் விஷயங்களும் தரப்பட்டுள்ளன.
புதிய அனுபவம் எது என மைக்ரோசாப்ட் கூறுவதனைப் பார்க்கலாமா!
1. இதன்புளுடூத் புரோடோகால் தொகுப்பு மேம்படுத்தப்பட்டு இப்போது புளுடூத் 2.1 பதிப்பிற்கான வகையில் மாற்றப் பட்டுள்ளது.
2. தனி புரோகிராம் எதுவும் இணைக்காமல் புளு ரே டிஸ்க்கினை இயக்கலாம். (ஆனால் புளு ரே பர்னருக்கு இணையான புரோகிராம் தேவைப் படும்)
3. விஸ்டா சைட் பாருக்கான மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.
4. ஸ்லீப் மோடிலிருந்து வெளியே வந்தபின் நன்றாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வை–பி வசதி தரப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.பி.2 பேக்கில் ஏறத்தாழ 700 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவது 10 சதவிகித அளவில் மேம்பாடு அடையும்.
விஸ்டா எஸ்.பி. 2 பைல் சற்று பெரியதாக உள்ளது.
உங்களிடம் டயல்அப் கனக்ஷன் இருக்கும் பட்சத்தில் இன்று இரவு இதனை டவுண்லோட் செய்திடுவது நல்லது. பைலின் அளவு 348.3 எம்பி ஆகும். இரவில் பேண்ட்வித் ட்ராபிக் அவ்வளவாக இருக்காது என்பதால் இந்த அறிவுரை.நீங்கள் சர்வீஸ் பேக் 2 இறக்கிப் பதிய வேண்டுமென்றால் சர்வீஸ் பேக் 1 ஏற்கனவே பதிந்திருக்க வேண்டும். இந்த சர்வீஸ் பேக் இரண்டும் மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் கிடைக்கின்றன.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்
எழுதியவர் : கார்த்திக்
nnanum enga searalaama
ReplyDelete