நாம் வசிக்கும் பூமிக்கு சந்திரன் துணைக் கோளாக இருப்பதுபோல சனி கிரகத்துக்கும் சில துணைக் கோள்கள் உள்ளன. அந்த துணைக்கோள்களில் ஒன்று "டைட்டன்' இந்த துணை கிரகமானது பூமியிலிருந்து 100 கோடியே 30 லட்சம் கிலோமீட்டர் தொலை வில் உள்ளது. இதன் வெப்பநிலை மைனஸ் 179 டிகிரி செல்சியஸ் ஆகும். சனி கிரகத்தையும் அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆய்வு செய்ய காசினி என்ற விண்கலத்தை விஞ்ஞானி கள் அனுப்பியுள்ளனர். அதிலுள்ள ரேடார் டைட்டன் துணைக்கோளின் 20 சதவீத மேற் பரப்பை ஆய்வு செய்து படம் பிடித்துள்ளது. அதன் மூலம் டைட்டன் துணைக்கோளின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள், கடல்கள் இருப்பதும் அவற்றில் எண்ணெய் வளங்கள் நிறைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணெய் வளம் பூமியில் உள்ள எண்ணெய் வளத்தைப் போல் பல நூறு மடங்குகள் அதிகம் என்றும் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
நல்ல செய்தி. எண்ணெய்கான மற்றொரு போர் மூளுமா?
ReplyDelete