நடிகர் விஜய் பிறந்த நாள், இதையொட்டி தனது ரசிகர்களுக்கு, "மெசேஜ்' அளிக்கும் வகையில் விஜய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’என் ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி, சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து, சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனைகளோடும் ஆக்கபூர்வமான நற்பணிகளை செய்து, எனக்கு பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்துஇருக்கிறீர்கள்.
ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப்பணிகளாக விரிவடைந்துள்ளது. உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய ரசிகர்கள் சாதாரண ரசிகர்களாக மட்டுமில்லாமல், நற்பணி நாயகர்களாகவும், நல்ல சமூக சேவகர்களாகவும் உருவெடுத்திருப்பது பெருமையான விஷயம். நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
அதனால் தான், கல்விப் பணியில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன். பல நூறு ஏழைக் குழந் தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்த நாளுக்காக சென்னையில் இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி துவங்குகிறேன்.
நான் எந்த நல்ல செயல்களை செய்தாலும், அதை ரசிகர்களாகிய நீங்களும் பின்பற்றி வருகிறீர்கள். எனவே, இலவச கம்ப் யூட்டர் பயிற்சிப்பள்ளியை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். இதை என் பிறந்த நாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.
நேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும்.
இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் உங்கள் சமூகப் பணியை வளர்க்க வேண்டும்.
இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில், அடுத்த ஆண்டில் கால் பதிக்கிறேன்’’என்றூ தெரிவித்துள்ளார்.
நன்றி : நக்கீரன்

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.