மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இணைய தேடலுக்கு உதவிடும் புரோகிராம்

சில நேரங்களில் நாம் தகவல்கள் தேட சர்ச் இஞ்சினை (கூகுள், யாஹூ, எம்.எஸ்.என். போன்ற) பயன்படுத்துகையில் நமக்குத் தேவயில்லாத தகவல்கள் அடங்கிய தளங்களின் முகவரிகள் எல்லாம் கிடைக்கும். எடுத்துக் காட்டாக Mobile Phone என்ற சொற்களைக் கொடுத்துத் தேடச் சொன்னால் Mobile banking, Mobile Van, Mobile Police, Mobile Post Office போன்றவை அடங்கிய தளங்களும் கிடைக்கும். அடடா! எப்படி இந்த தேடும் தளத்திற்குப் புரியவைப்பது என்று நமக்கு நாமே திட்டிக் கொள்வோம்.


இந்நிலையில் உதவுவதற்கென்றே ஸிப்பி என்று ஒரு புரோகிராம் உள்ளது. இதனை அந்த தளம் சென்று இதன் பயன்பாடுகள் என்ன என்று அந்த தளத்தில் உள்ள வீடியோ காட்சியிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பின் இதன் வலது பக்கப் பிரிவில் நீங்கள் பயன்படுத்தும் தேடல் தளத்திற்கு உகந்த ஸிப்பி புரோகிராம் எது என்று காட்டப்படும். நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கு சரியான புரோகிராம் எது என்று கண்டு அதனை டவுண்லோட் செய்திடலாம். இங்கு ப்யார்பொக்ஸ் தொகுப்பிற்கான எடுத்துக் காட்டினைக் கொண்டு உங்களுக்கு இதனை விளக்குகிறேன். அதற்கான புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள்.


பின் அதனை இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குங்கள். இப்போது இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி www.google.com தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு எனக் கொடுத்துப் பாருங்கள். ஏற்கனவே கூறியது போல பல தொடர்பற்ற தளங்களும் வரும். ஆனால் உங்களுக்கு Phone சார்ந்த தளங்கள் வேண்டும்.

அது மொபைல் போன் குறித்து இருக்க வேண்டும். இப்போது எந்த சொல் வேண்டாமோ அதனைக் குறித்து பின்– (minus) அடையாளத்தை கிளிக் செய்திடுங்கள். இனி வரும் தள முகவரிகளில் எந்த சொல் வேண்டுமோ அதில் + அடையாளத்தைக் கொண்டு கிளிக் செய்தால் அது குறித்த தளங்கள் மட்டுமே வரும். இதே போல பல வசதிகளை இந்தத் தளம் கொண்டுள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து இன்னும் பல சொற்களை கொடுத்துச் சோதித்துப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

எழுதியவர் : கார்த்திக்

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.