மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இன்று விஜய் T.V விருது வ‌ழங்கு‌ம் விழா

சினிமா கலைஞர்களுக்கு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த நட்சத்திரங்களும் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் வென்றவர்களும் விருதுகள் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படத்திற்காக அபியும் நானும், அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் இருந்து சிறந்த படம் அறிவிக்கப்படும்.

சிறந்த நடிகருக்கான தேர்வுப்பட்டியலில் இருப்பவர்கள் கமலஹாசன், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி ஆகியோர். அசின், ஜெனிலியா, பார்வதி, சிநேகா நடிகையர் பட்டியலில் இருக்கிறார்கள். விழாமேடையில் சிறந்த நடிகர்-நடிகையர் அறிவிக்கப்படுவார்கள்.

விருது வழங்கும் விழா விஜய் டிவியில் வரும் 18, 19ஆ‌ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் விருது விழாவுக்கென நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு நீதிபதிகள் இயக்குனர் பிரதாப்போத்தன், நடிகர் யூகி து, நடிகை லிசி பிரியதர்ஷன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு திரைத்துறை தொடர்பன பல சுவாரசிய தகவல்களையும் தருகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.