மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வைரமுத்துவை கொச்சைப்படுத்திய இயக்குநர்

இயக்குநர் செல்வபாரதி ஒரு கவிஞர். நல்ல கவிதை ரசிகர். இவர் ஏன் இப்படி செய்தார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

போகிற போக்கில் எழுதப்பட்ட கவிதை நூலோடு வாழ்ந்து அனுபவித்து, அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு நூலுடன் ஒப்பிட்டு பேசி, ஏன் தன்னை அரைவேக்காடாக காட்டிக்கொண்டார் என்று தெரியவில்லை.

தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் நூலுடன் காதல் சில்மிசங்களை மட்டுமே பிரதிபலிக்கும் நூலுடன் ஒப்பிடும் அவரை என்னவென்று சொல்வது.

காதல் கவிதைகளை மட்டுமே எழுதி குவித்துவரும் தபூசங்கரின் ஒரு கவிதைத்தொகுப்பின் பெயர் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய். அவர் இயக்குநராக அவதரிக்கும் படத்திற்கும் அதையே தலைப்பாக சூட்டிவிட்டார்.

இப்படத்தின் ஆரம்பவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் செல்வபாரதி, ‘’வைரமுத்துவிற்கு ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி ...தபூசங்கருக்கு ஒரு வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் நூல்..’’என்று புகழ்ந்து தள்ளினார்.

என்ன கொடுமை சார்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.