
எம்மாம் பெரிசு? இது கல்யாண மண்டபமா, இல்லை, மன்னர்களின் மாளிகையா? என்று வியப்பை தருகிற நட்சத்திர வீடுகளில் நம்பர் ஒன் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் வீடுதான். இங்கே 100 அறைகளுக்கு குறையாமல் இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக அமையப் போவது மாதவனின் வீடாகதான் இருக்கும். ஏனென்றால் ஈசிஆர் சாலையில் இவர் கட்டி வரும் வீட்டின் பரப்பளவு 12 கிரவுண்ட். அதில் எட்டு கிரவுண்ட் பக்கா வீடு என்கிறார்கள்.
மாதவனுக்கு பிராணிகள் என்றால் இஷ்டம். மற்ற ஹீரோக்கள் மாதிரி மாமிச பிரியரும் அல்ல. எனவே வீடு கொள்ளாமல் பிராணிகளை வளர்க்கும் திட்டம் வைத்திருக்கிறாராம். கஜினி கதையை சொல்லப் போகும்போது நாய் குட்டி போடுவதை ரசித்துக் கொண்டே கதை கேட்ட மாதவன், கதையை சொல்ல வந்த ஏ.ஆர்.முருகதாசுக்கு எரிச்சலை மூட்ட, விருட்டென்று எழுந்து போனார் டைரக்டர். இந்தியாவையே கலக்கிய ஒரு வெற்றிப்படம் கைவிட்டு போனது ஐந்தறிவு ஜீவனால். இப்போது வீடு கொள்ளாமல் பிராணிகள் என்றால்...?
நல்லா கதை கேட்டு... நல்லா நடிச்சு... வெளங்கிரும் போங்க!
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.