நேற்று பவுர்ணமி தினம். இந்த தினத்தில் திருவண்ணாமலையாரை வலம் வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது ஐதீகம். லட்சக்கணக்கானவர்கள் இந்த மலையை வலம் வந்து கொண்டிருப்பதை பவுர்ணமி நாளில் பார்த்து அதிசயிக்கலாம். ரஜினி உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
லேட்டஸ்ட்டாக இந்த பக்தர்கள் லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் சினேகா. நேற்று தனது தந்தை ராஜாராமுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தவர், கிரிவலம் சுற்ற ஆரம்பித்தார். தன்னை பார்த்து கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு இந்த கிரிவல சுற்றை துவங்கினார். (சுமார் 19 கிலோ மீட்டர் தூரம்) ஆனால் அந்த நேரத்திலும் இவரை அடையாளம் கண்டு கொண்டு விரட்டினார்களாம் ரசிகர்கள்.
அதிகாலை நான்கு மணிக்கு மலையை சுற்றி முடித்துவிட்டு ஓய்வெடுத்த சினேகா, அதிகாலையில் மீண்டும் கோவிலுக்கு சென்று வழிபட்டாராம். எது குறித்து இந்த பிரார்த்தனை? என்று கேட்ட நிருபர்களுக்கு (பார்றா... அந்த நேரத்திலும் கூடிட்டாய்ங்க...) பிரார்த்தனையை வெளியே சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு நழுவியிருக்கிறார் சினேகா.
இந்த நேரத்தில் இன்னொரு பரிதாபமான செய்தி. உள்ளே கிடந்து கம்பி எண்ணும் எஸ்எம்எஸ் புகழ் ராகவேந்திராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால் பிணையில் கையெழுத்திட ஆளில்லையாம். பெங்களூருவில் இருக்கும் அவரது பெற்றோர்களும், நண்பர்களும் “உள்ளே கிடந்து அனுபவிக்கட்டும். அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம்” என்று ஒதுங்கிக் கொண்டார்களாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.