
தனுஷ் பெயரில் யாரோ இப்படி ஒரு பேஸ் புக்கை துவங்கி வெட்டி அரட்டை அடித்த கதையை அறிந்த பேஸ்புக்கர்கள் அட பாவி பயலுகளா என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நயன்தாராவும் இப்படி சொல்லவும், அப்ப அத்தனையும் பொய்யா...? என்று கொதியாக கொதிக்கிறார்கள்.
இதுவரைக்கும் நயன்தாராவின் பேஸ்புக்கில் வந்த அரிய புகைப்படங்களை பார்த்தால், இந்த இணைப்பில் யாரோ போலியாக விளையாடியது போல தெரியவே இல்லை. ஏனென்றால் சமீபத்தில் ஆதவன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு போன போது எடுத்த படங்களை கூட அங்கிருந்து சுடசுட பதிவு செய்யப்பட்டிருந்தது அதில். அப்படியிருக்க யாரோ ஒரு டுபாக்கூர் எப்படி இந்தளவுக்கு ஃபிரஷ்ஷாக படங்களை வெளியிட முடியும்?
எது எப்படியோ? நயன்தாரா வெளிநாட்டுக்கு போனாலும் இங்கிருந்து அவர் பற்றிய விஷயங்களை எடுத்துக்கூற நாலு பேரும், அதை காதில் வாங்கிக் கொண்டு கவலைப்படுகிற மனசும் அவருக்கு இருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்தான்!
see this - http://www.tamilthunder.com/forum/showthread.php?t=46778
ReplyDelete