
படத்தின் தயாரிப்பாளர் முழு ஸ்கிரிப்டையும் சேம்பரில் சமர்ப்பித்து, புராண ராமருக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்த பிறகே ராமர் பெயரை பயன்படுத்த அனுமதித்தனர்.
சேம்பரால் அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு பெயர் அழகிரி. தயாரிப்பாளர் தலைகீழாக நின்றும் இந்தப் பெயரை பயன்படுத்த அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சேம்பர் உறுப்பினர்களை திடுக்கிட வைத்த இன்னொரு பெயர், அமீர். அமீர் என்றாலே இயக்குனர் அமீர்தான் நினைவுக்கு வருவார். அவரது பெயரை படத்துக்கு பயன்படுத்துவது சரியாக அமையாது என அனுமதி மறுத்தனர்.
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜெய்லானி - இவர்தான் அமீர் டைட்டிலை பதிவு செய்ய விரும்பியவர் - தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அமீரிடமே இந்த பஞ்சாயத்தை கொண்டு சென்றார்.
என்ன இருந்தாலும் கலைஞனாயிற்றே... பெயரில் என்ன இருக்கிறது என்று தனது பெயரை படப் பெயராக பயன்படுத்த அனுமதி அளித்திருக்கிறார் அமீர். சாமியே வரம் கொடுத்தபின் பூசாரிகளுக்கு என்ன கஷ்டம்? சேம்பரும் பச்சைக்கொடி காட்ட, தனது அமீர் பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளார் ஜெய்லானி.
publicity...........
ReplyDelete