மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சித்தர் குறித்த தேதியும் விஜயின் அரசியல் பிரவேசம்மும்

திருவண்ணாமலை சித்தர் சொல்லிதான் அரசியலில் குதிக்க போகிறாராம் விஜய். அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், திருவண்ணாமலை, திருக்கடையூர் என்று இந்து கடவுள்கள் மீதும் அலாதி பக்தி வைத்திருக்கிறார் விஜயின் அம்மா ஷோபா. அதனால் மேற்படி திருத்தலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் அவர் போகிற இடத்திலெல்லாம் பிள்ளையின் அரசியல் பிரவேசத்திற்காகவும் வேண்டிக் கொள்வாராம். அப்படி திருவண்ணாமலைக்கு போகிற போதுதான் எப்போது அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வந்ததாம் சித்தரிடமிருந்து. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் கூட, இப்போதெல்லாம் அரசியல் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே என்ற சந்தேகம் இருக்கட்டும். திருமதி ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு அற்புதமான காரியம் செய்திருக்கிறார்.

அபிராமி பட்டர் பாடிய பாடல்களை தனது குரலில் பாடி ஆடியோ தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். கடந்த வாரம் இதற்காக திருக்கடையூர் அபிராமி சன்னதிக்கு சென்றிருந்தாராம். அந்த சன்னதியில் வைத்தே இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சிம்ப்பிளாக நடத்தியிருக்கிறது கோவில் நிர்வாகம்.

விஜயின் அம்மா கோவிலுக்கு வருகிற தகவலை ரகசியமாகவே வைத்திருக்க நினைத்தாலும், நடக்கிற காரியமா அது? விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கோவில் வாசலில் முற்றுகையிட்டார்களாம். ரசிகர்களின் அன்புக்கு நின்று நிதானமாக நன்றி சொல்ல கூட முடியாதளவுக்கு தள்ளுமுள்ளு.

கோவிலில் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்? சித்தர் குறித்த தேதி சீக்கிரம் வரட்டும் என்றா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்த்ரம் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்திரம் முதன்முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. வாங்கி பயனடைவீர்
    தொடர்புக்கு M G பாலா 9345342424

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.