மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நான் அவ்வளவு பெரிய சீன் இல்லே! -விஜய்

கடந்த ஒரு மாதமாகவே காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய், திடீரென்று அரசியல் குறித்த தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு விலாங்கு மீனாக நழுவியதே சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது. ஞாயிற்று கிழமை 1.30 வரை எமகண்டம் என்பதால் அதற்கு பிறகுதான் மண்டபத்திற்கே வருவார் என்ற நிருபர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு சரியாக 1.15க்கு மண்டபத்திற்குள் நுழைந்தார் விஜய்.

நான் ராகுல்ஜியை சந்தித்துவிட்டு வந்த பின்பு எல்லா பத்திரிகைகளிலும் ஏராளமான செய்திகள். அதையெல்லாம் படித்துவிட்டு “அட இப்படி நடந்தால் நல்லாயிருக்குமே” என்று நினைத்தேன். அந்தளவுக்கு நிறைய எழுதியிருந்தீங்க. உண்மையில் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாக ஐடியா இல்லை என்று முதலில் விளக்கிய விஜய், “நான் அவ்வளவு பெரிய சீன் இல்லைங்க” என்றார் கேஷ§வலாக.

பின்பு நிருபர்களின் கேள்விகளுக்கு நிறைய யோசித்து கவனமாக பதில் சொல்ல ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் விஜய் பதில் சொல்ல முடியாதபடி கேள்விகள் வந்து விழ, சரக்கென்று எழுந்து மைக்கை வாங்கிய விஜயின் அப்பா எஸ்.ஏ.சி “பேட்டி முடிந்தது. வந்திருந்தவங்களுக்கு நன்றி” என்று கூட்டத்தை முடித்தார்.

செய்தியார்களின் கேள்விகளுக்கு விஜய் கூறிய பதில்கள் வருமாறு-

ராகுல் காந்தி உங்களை அழைத்தாரா? அல்லது நீங்கள் ராகுலை சந்தித்தீர்களா?

என் நலம்விரும்பி ஒருவர் மூலம் ராகுல்ஜியிடம் இருந்து அழைப்பு வந்தது.

இந்த சந்திப்பையும் என்ன பேசினோம் என்பதையும் ஏன் ரகசியமாக வைத்திருந்தீர்கள்?

எந்த ரகசியமும் இல்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் சந்திப்பின் போது அதிகம் சினிமாவை பற்றிதான் பேசினோம்.

காங்கிரஸ் தரப்பில் ராஜ்ஜிய சபா எம்.பி.பதவி தருவதாக கூறப்பட்டதாமே?

எங்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமானமானது. பதவி குறித்து எதுவும் பேசவில்லை. இந்த தகவல் எனக்கு புதுசாக இருக்கிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசினீர்களா?

அதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை.

நதிகளை இணைப்பது குறித்து ராகுல்காந்தியின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நோ கமெண்ட்ஸ்.

எதிர்காலத்தில் உறுதியாக அரசியலுக்கு வருவீர்களா?

வாய்ப்பு இருக்கலாம்

உங்கள் மக்கள் இயக்கம் தன் கட்சியாக மாறுமா?

மாறலாம்

உங்களுக்கு 36 வயது ஆகிவிட்டதால் இளைஞர் காங்கிரசில் சேர இயலாது என்று ராகுல் காந்தி கூறிவிட்டாரே? உங்கள் சந்திப்பின் போது இளைஞர் காங்கிரசில் பதவி கேட்டீர்களா?

இளைஞர் காங்கிரஸ் பதவி பற்றி பேசவே இல்லை.

நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அது ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று நிறைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததே?

தமிழ் மக்களுக்கு ஒன்று என்றால் நான் களத்தில் இறங்கி போராடுவேன். இலங்கை தமிழர்களுக்காக நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருந்தோம். உலக தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. எங்களை வைத்து காமெடி கீமெடி பண்னலையே
    beer mohamed
    http://beermohamedtamilgroup.blogspot.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.