கசியுற பானையில் புளியை வச்சு அடைச்ச மாதிரி, அவசரத்துக்கு ஒரு பதிலை சொல்லி ஊர் வாய்க்கு லாக் போட்டிருக்கிறார் நயன்தாரா. “நானும் பிரபுதேவாவும் நல்ல பிரண்ட்ஸ். எங்களுக்குள்ளே காதல், கல்யாணம்னு வர்ற செய்திகளில் உண்மை இல்லை. என் அப்பா அம்மா சொல்ற நபரைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” இதுதான் நயன் சொல்லியிருக்கும் நச் பதில். அதுவும் கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்தவரை வழி மறித்து கேட்ட நிருபர்களுக்கு அவர் சொன்ன பதில் இது.
இந்த காதல் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து பதில் சொல்லி வருவது இவர் மட்டும்தானே தவிர, பிரபுதேவாவிடமிருந்து ஒரு வார்த்தை பெயரவில்லை. நிருபர்களை கண்டாலே சிட்டாக பறந்துவிடுகிறார் மனிதர். முக்கிய விழாக்களுக்கு வருவதை கூட இந்த ஒரு விஷயத்திற்காகவே தவிர்த்துவிடுகிறார். அப்படி வந்தாலும் ‘வாம்மா மின்னலு’ ஸ்டைல்தான்!
இவர்களின் காதல் கல்யாணத்தில் முடியுமா என்று சாமியிடம் குறி கேட்காத குறை. மற்றபடி சந்து பொந்தெல்லாம் மூக்கை நுழைத்து புலனாய்கிறார்கள் கோடம்பாக்கத்து வெட்டி ஆபிசர்கள். அவர்களுக்கும் சேர்த்துதான் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் நயன். ஆனால் பதில்தான் இப்படியே ஒழிய, அடைந்தால் பிரபுதேவா என்பதில் அதி தீவிரமாக இருக்கிறாராம் நயன்.
இவரது இந்தி பிரவேசம் கூட இந்த ஒரு விவகாரத்தால் தள்ளிப் போகிறதாம். ஒருவேளை பாலிவுட்டில் பிசியாகிவிட்டால் காதல் கைநழுவிப் போய்விடுமே என்ற அச்சமும் இருக்கிறதாம் நயனிடம். அப்படின்னா இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழன் காட்டில் கவர்ச்சி மழைதான் போலிருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.