
ரஜினி, அமலா நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிப்பது தெரியும். பொதுவாக வரிவரியான பனியன் போட்ட வில்லன்களுடன் மோதும் ரஜினி இந்தப் படத்தில் உடம்பு முழுக்க நகை போட்ட ஸ்ரீவித்யாவுடன் மோதுவார். படத்தில் அமலாவின் அம்மாவாக அதாவது ரஜினியின் மாமியாராக வருவார் ஸ்ரீவித்யா.
ரீமேக்கில் ரஜினி பாத்திரத்தை தனுஷும், அமலா கேரக்டரை ஹன்ஷிகாவும் பங்கு போட்டுள்ளனர். தேவை ஒரு பவர்ஃபுல் மாமியார். அனுஹாசன் தொடங்கி ஸ்ரீதேவி, தபு, ஜெயபிரதா என பலரை முயன்று இறுதியில் ஜெயபிரதாவை டிக் செய்துள்ளனர். இவர்தான் ஹன்ஷிகாவின் அம்மாவாக தனுஷை மிரட்டப் போகிறவர்.
தனுஷை வைத்து படிக்காதவன் படத்தை எடுத்த சுராஜ் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.