கமல்ஹாசன் ரெட்டைச்சுழி படத்துக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார். இதுதான் ஷங்கர் அலுவலகத்தை வலம் வரும் லேட்டஸ்ட் செய்தி.
தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் இருவருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. இதில் ஒன்று பாலசந்தர் பாடுவதாக வரும் பேத்தா ஸாங்.
இந்தப் பாடலை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்பது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இயக்குனர் தாமிரா ஆகியோரின் விருப்பம். விஷயம் கமலின் காதுகளுக்குப் போய் அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
தனது அடுத்தப் படத்தின் வேலைகளுக்காக ஹாலிவுட் சென்றிருக்கும் கமல், நவம்பர் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பாடல் பதிவு இருக்குமாம்.
கார்த்திக் ராஜா இசையில் இதற்குமுன் அஜித்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கமல் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.