மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தனுஷுக்கு பதில் சிம்பு

தனுஷை வைத்து தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் பூபதி பாண்டியன். அடுத்தும் இவர் தனுஷை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த வேளையில் இவருக்கும், தனுஷுக்கும் முட்டிக் கொண்டது.

இந்த பிளாஷ்பேக் சண்டையை இப்போது சொல்ல காரணமிருக்கிறது. தனது தம்பியை ஹீரோவாக்கும் முனைப்பில் இருந்த பூபதி பாண்டியன், அந்த புராஜெக்டை ஒதுக்கி வைத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். எதி‌ரிக்கு எதி‌ரி நண்பன்?

எப்படியோ, சிம்பு நடிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குவது உறுதியாகிவிட்டது. படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது. தற்போது அந்த நிறுவனம் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பையா படத்தை தயா‌ரித்து வருகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இந்த புதிய புராஜெக்டில் நடிக்கிறார் சிம்பு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.