பிரமிட் சாய்மீரா நிறுவனம் தனக்கு நஷ்டஈடாக 11 கோடி ரூபாய் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மர்மயோகி படத்தை இயக்கி நடித்து தருவதாக கமல் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்சனையால் மர்மயோகி படப்பிடிப்பை தொடராமல் கிடப்பில் போட்டது பிரமிட் சாய்மீரா. இதனைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார் கமல்.
உன்னைப்போல் ஒருவன் படத்தை மர்மயோகிக்காக பிரமிட் சாய்மீரா அளித்த பணத்தில் கமல் தயாரித்ததாக குற்றம்சாட்டிய சாய்மீரா, அந்த பணத்தை கமல் செட்டில் செய்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.
படத்தை தடை செய்ய மறுத்த நீதிமன்றம், 3 கோடியே 93 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை கோர்ட்டில் கமல் தரப்பு கட்ட வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி உன்னைப்போல் ஒருவனை வெளியிட்டனர்.
இந்நிலையில் தனக்கு நஷ்டஈடாக 11 கோடி ரூபாயை பிரமிட் சாய்மீரா தர வேண்டும் என கமல் வழக்கு தொடர்ந்துள்ளார். மர்மயோகி படத்தை இயக்கி, நடித்து தருவதாக பிரமிட் சாய்மீராவுடன் ஒப்பந்தம் போட்டதாகவும், படம் முடியும் வரை வேறு படத்தில் நடிப்பதில்லை என ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தனது மனுவில் கமல் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தப்படி தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லையென்றும், பிரமிட் சாய்மீரா மர்மயோகி படத்தை தயாரிக்காமல் கிடப்பில் போட்டதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் படங்களில் நடிக்காததால் நாற்பது கோடி வரை தனக்கு நஷ்டம் என்றும் புகார் மனுவில் கமல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பிரமிட் சாய்மீரா தனக்கு 11 கோடி ரூபாய் நஷ்டஈடாக தர வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 9 ஆம் தேதி பதில் மனு அளிக்க பிரமிட் சாய்மீராவுக்கு உத்தரவிட்டார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.