மாஸ் ஹீரோக்கள் படம் தொடங்கினால் கூடவே ஒரு கூடை வதந்தியும் கிளம்பும். விஜய் தனது 50வது படமான சுறாவின் படப்பிடிப்பை கேரளாவில் தொடங்கியிருக்கிறார். இந்தப் படம் குறித்த முதல் வதந்தி சுவாரஸியமானது.
அன்வர் ரஷீத் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம், சோட்டா மும்பை. பாவனா மோகன்லாலின் ஜோடி. கொச்சி பின்புலத்தில் தயாரான இந்தப் படமே சுறாவாக தயாராகி வருகிறது என்கிறார்கள். ஆனால், இந்த தகவலை இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் தரப்பு மறுத்திருக்கிறது. ஆனாலும், ரசிகர்களுக்கு சோட்டா மும்பை கதையை கூறுவது நம் கடமை.
இதில் மோகன்லாலின் பெயர் வாஸ்கோடகாமா. நண்பர்களும் தெருவாசிகளும் அவரை செல்லமாக அழைப்பது, தலை. பணம் கொடுத்தால் அடிதடியில் இறங்கும் ஒரு காமெடி டீம் இவருடையது. டீமின் முக்கிய அங்கங்கள் சித்திக், ஜெகதி ஸ்ரீகுமார்.
ஏதிர்பாராத விதமாக ஒரு போலீஸ் அதிகாரியின் கொலையை இந்த டீம் பார்க்க நேர்கிறது. கொலையை இவர்கள் தலையில் கட்டப் பார்க்கிறது வில்லன் கோஷ்டி. இறுதியில் என்னானது என்பது கதை. ஆட்டோ டிரைவராக வரும் பாவனா எபிசோட் படத்தின் கலகல பகுதி. நடிகை ஷகிலாவுக்கு மோகன்லால் அண்டு கோ பாதுகாப்பு கொடுக்கும் காட்சியும் படத்தில் உண்டு.
இதுதான் சுறாவா? இல்லை என்கிறது இயக்குனர் தரப்பு. உண்மை படம் வெளியான பிறகு தெரியப் போகிறது.

எதுவாக இருந்தாலும் நம்மளுக்கு காமெடி படமாத் தான் இருக்கப் போகுது.... ஹைய்யோ ஹைய்யோ.....
ReplyDelete