
ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கும்போது செல்வராகவன் தயாரிப்பாளரிடம் சொன்ன பட்ஜெட் ஆறு கோடி. ஒவ்வொரு கட்டத்திலும் பட்ஜெட் மானாவரியாக எகிறி இறுதியில் 31 கோடியில் வந்து நிற்கிறது. படத்தை வெளியிட இன்னும் சில கோடிகள் தேவைப்படுமாம்.
ஒரு படம் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தியை வைத்து இந்த மெகா பட்ஜெட்டை திருப்பி எடுக்க முடியுமா என்பது தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கவலை. அதற்காக கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட முடியாதில்லையா? தில்லாக படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கி 12ஆம் நூற்றாண்டுக்கு பயணிக்கிற கதை. அதனால் இந்த பட்ஜெட் கண்டிப்பாக தேவைதான் என்று தனக்குத்தானே தேறுதல் சொல்வதுபோல் பத்திரிகைகளிடம் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிற படம் என்பதால் உலகம் முழுக்க படத்தை வெளியிடப் போறேன் என்று சில வாயில் நுழையாத நாடுகளின் பெயர்களை பட்டியலிடுகிறார்.
இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நீதி என்னவென்றால், ஆறு கோடி பட்ஜெட்டை 31 கோடியாக்கும் இயக்குனர்கள் இருந்தால் அப்பாவி தயாரிப்பாளர் அண்டார்டிகாவில் கூட படத்தை வெளியிடும் நிலை வரும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.