ஜெயம் கொண்டானுக்குப் பிறகு பாவனாவுக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. இந்நிலையில்தான் அசல் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பை பூ தானே உசத்தி. யோசிக்காமல் ஓகே சொல்லி நடித்து வருகிறார்.
நிலைமை இப்படியிருக்க, அசலில் நீங்க இரண்டாவது ஹீரோயின்தானே என்று கேட்டால் மட்டும் பாவனாவின் மூக்கு சிவக்கிறது. அசலில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருத்தி நான். எனக்கு அஜித்துடன் இரண்டு டூயட்கள் இருக்கு. அப்படி என்றால் யார் ஹீரோயின் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கேள்வியை நமக்கு திருப்பிவிடுகிறார்.
மூமைத்கானே ஹீரோவுடன் ஒரு பாடலுக்கு ஆடும் காலம் இது. போனால் போகிறது என்று பாவனாவுக்கு ஒன்று சோர்த்து கொடுத்திருக்கிறார்கள். இதை வைத்து அவர்தான் நாயகி என்று சொல்ல முடியுமா? அஜித்தின் ஜோடி சமீரா ரெட்டிதான் என்று யூனிட்டிலேயே கட்டியம் கூறுகிறார்கள்.
பாவம் பாவனா, வேறென்ன சொல்ல.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.