பையாவா? ஆயிரத்தில் ஒருவனா? எந்தப் படம் பொங்கலுக்கு என்ற போட்டா போட்டி ரேஸில் இறுதி வெற்றி செல்வராகவன் அணிக்குதான். சீனியாரிட்டிபடி ஆயிரத்தில் ஒருவனை பொங்கலுக்கு அனுமதித்திருக்கிறார்கள்.
செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவனை ஆரம்பித்து வருடங்கள் ஓடிவிட்டது. இந்த அதிகபடி தாமதத்தால் லிங்குசாமி கார்த்தியை வைத்து இயக்கியிருக்கும் பையா படத்தின் வேலைகளும் அநியாயத்துக்கு தாமதமாயின. முதலில் தொடங்கிய ஆயிரத்தில் ஒருவனை ஒருவழியாக முடிக்கும் போது, லிங்குசாமியின் பையாவும் ரிலீஸுக்கு தயார்.
ஆயிரத்தில் ஒருவன்தான் முதலில் தொடங்கிய படம், சீனியாரிட்டிபடி அதுதான் முதலில் வரவேண்டும் என ஆயிரத்தில் ஒருவன் தரப்பு பிடிவாதமாக நிற்க, ஏற்கனவே உங்களால் பல மாதங்கள் தாமதம், இனியும் தாமதிக்க முடியாது என லிங்குசாமி இன்னொருபுறம் முறுக்க, பிரச்சனை கிளம்பியது.
சீனியாரிட்டிபடி முதலில் ஆயிரத்தில் ஒருவனை வெளியிட தற்போது அனுமதித்திருக்கிறார்கள். ஆக, பொங்கலுக்கு பையா வரவில்லை, ஆயிரத்தில் ஒருவன்தான் திரையை ஆக்கிரமிக்கப் போகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.