Tuesday, December 29, 2009

> சரத் மகள் பாலா படத்தில்?

இதுதான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். ‘பாலா படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.’

பாலாவின் புதிய படத்தில் விஷால், ஆர்யா நடிக்கிறார்கள். படத்தின் போட்டோசெஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் பாலா.

இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம். சிம்பு நடிக்கயிருந்த போடா போடி படத்தில் வரலட்சுமி அறிமுகமாவதாக இருந்தது. கடைசியில் பார்த்தால், போடா போடி படமே ட்ராப்.

இந்நிலையில் பாலா படத்தில் வரலட்சுமி அறிமுகமாவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

என்றாலும், பாலா சொல்லும் வரை கேள்விக்குறியுடன்தான் இதுபற்றி பேச வேண்டியிருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.