
பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், வெங்கட்பிரபுவின் கோவாவும் இழுபறியில் உள்ளது.
கோவா ஆடியோ வெளியீட்டு விழாவே வரும் 4ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பேமெண்ட் விஷயத்தில் கறாராக இருந்ததால்தான் இந்த தாமதம் என்கிறார்கள்.
இப்படி கோவா தடுமாறுவது போலவே தீராத விளையாட்டு பிள்ளை தயாரிப்பாளருக்கும் இரு வேறு எண்ணங்கள். ஆயிரத்தில் ஒருவன், குட்டி என போட்டி பலமாக இருக்கும் போது நமது படத்தை வெளியிட்டு ரிஸ்க் எடுப்பானேன் என்று யோசிக்கிறாராம். பொங்கல் ரிசல்டைப் பார்த்து படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
போகி வரை பொங்கல் படங்களின் லிஸ்ட் மர்மமாகதான் இருக்கும் போல.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.