Tuesday, December 29, 2009

> அட்டகாச அவதார்

வெளியாகி சில நாட்களிலேயே யுஎஸ் ஆல் டைம் பாக்ஸ் ஆஃபிஸில் 84வது இடத்தைப் பிடித்திருக்கிறது அவதார். கிறிஸ்மஸ் வரை யுஎஸ்ஸில் இப்படம் வசூலித்திருப்பது 212 மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள்.

இந்தியாவிலும் 2012 படத்தின் சாதனையை அவதார் முறியடித்திருக்கிறது. ஒரே வாரத்தில் 22 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. கிறிஸ்மஸுக்கு முதல் நாள் வரை இப்படம் இந்தியாவில் வசூலித்தது ஏறக்குறைய நாற்பது கோடிகளாம்.

பல பிராந்தியப் படங்களின் வசூலை மிகச் சாதாரணமாக முறியடித்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூனின் படம். உலக அளவில் கேமரூனின் டை‌‌டானிக் படம்தான் வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.

உலக அளவிலான பாக்ஸ் ஆஃபிஸில் தற்போது 125வது இடத்தில் இருக்கும் அவதார், டைட்டானிக் வசூலை முறியடிக்குமா என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்பு.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.