Tuesday, December 29, 2009

> பிரபாகரன் வேடத்தை மறுத்த சேரன்

அய்யனார் படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆதி. பி.எல்.தேனப்பனின் ராஜலட்சுமி பிலிம்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

பிரபாகரனாக இருக்கும் ஆதியை ஊரே கொண்டாடுகிறது. ஆனால், அவரது குடும்பமோ வெறுத்து ஒதுக்குகிறது. இந்த வெறுப்புக்கு காரணம், பிரபாகரனான ஆதி அய்யனார் என்ற பெய‌ரில் செய்த கொலைகள். ஏன் ஆதி அய்யனார் என்ற பெய‌ரில் கொலை செய்தார்? அதற்கான காரணம் என்ன என்பது படத்தின் சஸ்பென்ஸ் பகுதி.

படத்தில் ஆறு பிரமாண்ட சண்டைகள் இடம் பெறுகிறது. இந்தப் படத்தில் ஆதி நடித்திருக்கும் பிரபாகரன் கேரக்டருக்காக இயக்குனர் ராஜமித்ரன் முதலில் அணுகியது சேரனை. கதையை கேட்டவர், இவ்வளவு பெ‌ரிய ஆ‌க்சன் கதைக்கு நான் சூட் ஆக மாட்டேன் என்று பிரபாகரன் கேரக்ட‌ரில் நடிக்க மறுத்திருக்கிறார். அதன் பிறகே ஆதியிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள்.

ஆ‌க்ச‌ன் கதை என்றாலும், வாலிபால் கோச்சாக இருக்கும் ஆதி, மீரா நந்தனுக்கு பயிற்சி கொடுப்பதும், அவருடன் காதல் கொள்வதுமான காட்சிகளை கவித்துவமாக எடுத்திருக்கிறார்களாம். காதல்னாலே கவித்துவம் வந்திடும்தானே.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.