வண்ணத்துப்பூச்சி படத்துக்கு கிடைத்த பாராட்டு அளவுக்கு பணம் புரளவில்லை. கல்லா நிறைந்தால்தானே அடுத்தப் படத்துக்கு வாய்ப்பு கிடைக்கும்? இனி கமர்ஷியலையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வதென்ற முடிவுடன் ராசி அழகப்பன் இயக்கும் படம் ஜீவா பூங்கா.
பெயரில் கவித்துவம் வழிந்தாலும், ரத்தம் தெறிக்கும் கதை என்கிறார்கள். கல்குவாரியில் வேலை செய்யும் தருண்கோபி அநியாயத்துக்கு எதிராக பொங்கியெழுவதுதான் படத்தின் மையம். கிருஷ்ணகிரியில் கல் உடைப்பவர், சென்னையிலுள்ள பூங்காவை ஏன் தஞ்சமடைந்தார் என்பது சுவாரஸியமான திரைக்கதை.
இனி தொடர்ந்து ஹீரோதானா என்று தருண்கோபியிடம் கேட்டால், ஆமா, ஆனால் டைரக்சனையும் விடுவதாக இல்லை என்றார். அதாவது, அவர் இயக்கும் படத்தில் அவரே நடிப்பார்.
ஏற்கனவே தயாராக இருக்கும் காட்டுப்பய ஸ்கிரிப்டை அடுத்த வருடம் இயக்கி நடிக்கப் போகிறாராம். படத்தை தயாரிக்க பாலசந்தரின் கவிதாலயாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.