
வேட்டைக்காரன் கதை கேட்டு, நடிகர்களின் கால்ஷீட் பிடித்து, திட்டமிட்டு உழைத்து உருவாக்கியவர்கள் ஏவிஎம் நிறுவனத்தினர். அவர்களுக்கு கணிசமான கரன்சி கல்லாவில் சேர்ந்துவிட்டதாக கேள்வி. உழைப்புக்கேற்ற ஊதியம்.
வேட்டைக்காரன் கேரளாவிலும் வெளியாகிறது. அங்கும் சேனல் இருப்பதால் விளம்பரத்துக்கு பயமில்லை. போட்டுத் தாக்கலாம். மொத்தம் 75 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதாக திட்டம். சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி படங்களுக்குக்கூட இந்த 75 பாக்கியம் கிடைத்ததில்லை. அதிகபட்சம் ஐம்பது அறுபது.
போக்கிரி நூறு நாட்களை கடந்ததால் கணக்குப் பார்க்காமல் காசை இறைத்து விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்கள். விஜய் படங்களில் கேரள உரிமை அதிக தொகைக்கு விலை போனது வேட்டைக்காரன்தான் என்கிறார்கள். சாமானியர்களின் படம் என்றால் எத்தனை கோடி என்பது தெரிந்திருக்கும்.
எப்படியோ, மலையாளிகளின் கவுரவ கொம்பை வேட்டைக்காரன் முறித்தால் சரிதான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.