அனில் திருபாய் அம்பானியின் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் மணிரத்னத்தின் படத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னம் ராவண் படத்தை தமிழ், இந்தி இரு மொழிகளில் எடுத்து வருகிறார். படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் திட்டமும் இருக்கிறது. அந்த வகையில் ராவண் படத்தை மும்மொழிப் படம் என்று சொல்லலாம்.
ராவண் படத்தின் தயாரிப்பில் பிக் பிக்சர்ஸ் நிறுவனமும் முதலில் தன்னை இணைத்துக் கொண்டது. பிறகு திடீரென்று அந்நிறுவனம் தயாரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இந்த பல்டிக்குப் பிறகு மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் சொந்தமாக படத்தை தயாரித்தார்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
இந்நிலையில் பிக் பிக்சர்ஸ் ராவண் படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்க ஆர்வம் காட்டுகிறதாம். மும்மொழிக்கும் சேர்த்து லம்பாக ஒரு தொகை தரவும் அது தயாராக உள்ளதாக மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னம் முடிவுக்காக காத்திருக்கிறது அம்பானி குழுமம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.