ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் ராவண் படத்தை வாங்க முயற்சிப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்கு பிக் பிக்சர்ஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவண் படத்தின் தயாரிப்பில் பிக் பிக்சர்ஸும் முதலில் பங்கெடுத்தது. பிறகு அந்நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த செய்தியை மணிரத்னமோ, பிக் பிக்சர்ஸோ மறுக்கவில்லை.
இந்நிலையில் பிக் பிக்சர்ஸ் ராவண் படத்தின் உரிமையை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனைத்தான் பிக் பிக்சர்ஸ் நிர்வாகி மறுத்திருக்கிறார்.
ராவண் படத்தின் தயாரிப்பில் முதலில் இருந்தே பிக் பிக்சர்ஸும் பங்கெடுத்து வந்திருக்கிறது. தயாரிப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படுவதில் எந்த உண்மையுமில்லை. படம் பிக் பிக்சர்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் கூட்டுத் தயாரிப்பாக வெளிவரும். மார்ச் அல்லது ஏப்ரலில் படம் வெளிவரலாம்.
படத்தின் பட்ஜெட் குறித்து கேட்டதற்கு சரியான பதிலில்லை. இந்தியாவில் தயாராகும் மிகப் பெரிய படங்களில் ராவண் படமும் ஒன்று என நழுவிக் கொண்டது பிக் பிக்சர்ஸ்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.