மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அமிதாப் பச்சன் மீது வழக்கு

அமிதாப் பச்சன் நடித்திக்கும் பா படத்தை வானளாவ புகழ்கின்றன இந்தி ஊடகங்கள். படத்தை இயக்கியிருக்கும் பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் இளையராஜா என்று பா-வை உருவாக்கியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமையளிக்கும் செய்தி.

இந்தப் படம் ஊனமுற்றோர்களை கேலி செய்வதாக பால்கி, அமிதாப் ஆகியோர் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டின் ஊனமுற்றோர் பாதுகாப்பு உ‌ரிமை சட்டத்தின்படி ஊனமுற்றோரை கேலி செய்வதும், அப்படி சித்த‌ரிப்பதும் குற்றமாகும்.

பா படத்தில் புரகே‌ரியா நோயால் தாக்கப்பட்ட அமிதாப் பச்சனை கேலிப் பொருளாக சித்த‌ரித்துள்ளனர். அதனால் அமிதாப், பால்கி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடுத்தவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகமில்லாமல் வழக்கு தள்ளுபடியாகிவிடும் என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.