டி.பி.கஜேந்தின் இயக்கியிருக்கும் மகனே என் மருமகனே படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர் தனுஷ்.
தனுஷே கூச்சப்படுகிற அளவுக்கு அவரை புகழ்ந்தனர் டி.பி.கஜேந்திரனும், எஸ்.பி.முத்துராமனும். ஒரு கட்டத்தில் ரஜினியின் கலை மற்றும் குடும்ப வாரிசு தனுஷ் என்று அவர்கள் புகழ, கூச்சத்தில் நெளிந்தார் தனுஷ். அடுத்த சூப்பர் ஸ்டார் தனுஷ் என்று சொன்னது ஹைலைட்.
பிறகு மைக் பிடித்த தனுஷ், நான் ரஜினி சாருக்கு வாரிசு அல்ல, கஸ்தூரி ராஜாவுக்குதான் வாரிசு. அவர் இல்லாவிட்டால் இந்த மேடையில் நான் நின்றிருக்க மாட்டேன் என்று 'தெளிய' வைத்தார்.
மகனே என் மருமகனே படத்தின் பிரஸ்மீட் நடந்த போது வெளியே நடிகர் விவேக் காத்திருப்பதாகவும், அவரும் பேச விரும்புவதாகவும் நிருபர்களிடம் கூறினார் டி.பி.கஜேந்திரன். இதற்கு செய்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.
விவேக் வரமாட்டார் என்று உறுதியளித்ததால்தான் செய்தியாளர்கள் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர். விவேக் மன்னிப்பு கேட்கவும் தயார் என கஜேந்திரன் கூறியதையும் செய்தியாளர்கள் ஏற்க மறுத்ததால் பாதியில் பிரஸ்மீட் முடிவுக்கு வந்தது.
செய்தியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மட்டமான வார்த்தைகளில் விவேக் விமர்சித்ததிலிருந்து அவர் கலந்து கொள்ளும் விழாக்களை செய்தியாளர்கள் புறக்கணித்து வருவதன் ஒரு பகுதிதான் இந்த பிரஸ்மீட் பாய்காட்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.