
சமீபத்தில் மீண்டும் போலீஸ் இவரை கைது செய்தது. தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தார் என்பது குற்றச்சாற்று. புழல் சிறையில் அடைக்கப்பட்ட புவனேஸ்வரி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
இவரது வக்கீல்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புவனேஸ்வரி டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் புவனேஸ்வரி இணைந்திருப்பதாகவும், அவருக்கு கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் உள்ள சேதுராமனின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற புவனேஸ்வரி, சேதுராமனுக்கு மாலை அணிவித்து அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்ததாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
மற்ற நடிகர்களைப் போல, நாட்டைக் காப்பாற்ற அரசியலில் சேர்ந்ததாக புவனேஸ்வரி அறிக்கை ஏதும் இதுவரை விடவில்லை என்பது ஆறுதல். தற்காலிகமாக தமிழகம் தப்பித்திருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.