Wednesday, December 30, 2009

> கௌதமி இயக்கம் கமல் கதை

நடிப்பைத் தாண்டி யோசித்து வருகிறார் கௌதமி. படம் இயக்க வேண்டும் என்பதே அவரது பிரதான விருப்பம். அவரது விருப்பத்துக்கு உருவம் கொடுக்க முன்வந்திருக்கிறார் கமல்.

ஆம், கமல் கதை எழுதும் படத்தை கௌதமி இயக்குகிறார். இது திடீரென எடுத்த முடிவு இல்லையாம். நெடுநாளாக ஆலோசித்து எடுத்த முடிவாம்.

பாலசந்தரை ஹீரோவாக்கி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது கமலின் நீண்டநாள் ஆசை. அதற்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார்.

ரெட்டச்சுழி படத்துக்குப் பிறகு சொந்த பேன‌ரின் முறியடி படத்தில் நடிப்பவர், கமலின் வேண்டுகோளை ஏற்று அவரது கதையிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைதான் கௌதமி இயக்குகிறார். படத்துக்கு இசை ஸ்ருதிஹாசன்.

குடும்பப் படம்?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.