Thursday, December 31, 2009

> சிம்பு, த்‌ரிஷா படம் பிப்ரவ‌ரியில்

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியாகிறது, விண்ணைத்தாண்டி வருவாயா.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பதிலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது, எதிர்பார்ப்பு மீட்டரை அதிக‌ரித்திருக்கிறது.

சிம்பு இதில் உதவி இயக்குனராக நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியூயார்க்கில் எடுத்திருக்கிறார்கள். லண்டனை தொடர்ந்து சென்னையிலும் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவ‌ரி 12 ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார்கள். காதல் பிளஸ் மியூசிக்கல் ட்‌ரீட்... இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.