மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நடிகை ரகசிய திருமணம்

பத்தி‌ரிகைகள் வெளியிட்ட சுவாதியின் ரகசிய திருமணம் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருப்பதிக்கு சாமி கும்பிட நேற்று தனது கணவருடன் வந்திருந்தார் சுவாதி.

விஜய், அ‌ஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த சுவாதி இடையில் சில காலம் படங்கள் இல்லாமல் இருந்தார். உடம்பை ஸ்லிம்மாக்கி மீண்டும் கோடம்பாக்க கதவை தட்டியதில் யோகி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் என்.ஆர்.ஐ. ஒருவரை சுவாதி கடந்த மாதம் திருமணம் செய்ததாக செய்தி வெளியானது. இப்போது சுவாதி அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

சுவாதியை திருமணம் செய்தவர் பெயர் கிரண். வர்‌ஜீனியாவில் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் வைத்துள்ளார். திருப்பதிக்கு நேற்று கணவருடன் வந்த சுவாதி, "வர்‌‌ஜீனியாவில் கணவருடன் குடியேற இருக்கிறேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்" என்றார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.