இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? ரஜினி, கமல், விஜய், அஜித்... ? இவர்கள் யாருமில்லை. வடிவேலுதான் அந்த நம்பர் ஒன் நடிகர்.
ஒரு நாளைக்கு நான்கு லட்சம், ஐந்து லட்சம் என்றுதான் சம்பளம் பேசுகிறார் வடிவேலு. இந்த ஒரு நாள் சம்பளத்தை ரஜினியின் எந்திரனுடன் ஒப்பிட்டால் மிக மிக அதிகம். கால்ஷீட் பத்து நாட்களைத் தாண்டும் என்றால் லம்பாக ஒரு தொகை பேசுகிறார். அப்படிதான் தில்லாலங்கடி படத்துக்கும் பேசப்பட்டது.
ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்துக்கு பதினைந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் வடிவேலு. காலையில் எல்லோரும் வந்த பிறகு வந்து, அனைவரும் கிளம்புவதற்குள் பேக்கப் செய்வது வைகைப் புயலின் ஸ்டைல்.
இந்த ‘சின்சியாரிட்டி’ காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிக்க மேலும் சில நாட்கள் தேவைப்படுகிறதாம். பிரச்சனை தெரிந்தும் நேரத்துக்கு வராமல் முரண்டு பிடிக்கிறாராம் வடிவேலு.
தில்லாலங்கடியில் பதினைந்து நாட்கள் நடிப்பதற்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி. கால்ஷீட் நீட்டிப்பு என்றால் மேலும் சில லகரங்கள் கொடுக்க வேண்டிவரும் என்பது முக்கியமான விஷயம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.