மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மார்பு வலி குறைய கை மரு‌த்துவ‌ம்

பச்சரிசியுடன் பாதியளவு உளுந்து, சிறிது தேங்காய் கூட்டி அரைத்து, மூன்றையும் கஞ்சி போலக் காய்ச்சி சர்க்கரையும், ஏலக்காயும் சேர்த்து குடித்து வர மார்பு வலி குணமாகும்.

உளுந்தம் மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர நெஞ்சு வலி தீரும். மார்பு படபடப்பு குணமாகும். உடல் பலமடையும்.

உளுந்தம் பருப்பை வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், சேர்த்து பொடியாக்கி நெல்லிக்காய் பொடி சம அளவு சேர்த்து சாப்பிட்டு வர இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும். இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளும் பொடியாக தினமும் பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

உளுந்தை இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர் கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல், முதலியவை குணமாகும்.

உளுந்தின் வேரை நிர்விட்டு மைபோல அரைத்து சூடாக்கி, பொறுக்கக் கூடிய சூட்டில் வைத்துக் கட்டிவர மூட்டு வீக்கம் குணமாகும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.